ஓட்டுனர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 18 ஆக உள்ளதை 16 வயதாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா கூட்டத்தொடரில் பொன்.ராதாகிருஷ்ணன் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ள அறிக்கையில் 100சிசி மற்றும் அதற்கு குறைவான கியர்கள் இல்லாத ஸ்கூட்டர் வாகனங்களுக்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு குறைந்தபட்ச வயதாக 16 நிர்னையிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனங்களிலும் ஸ்பீட் லிமிட் கருவிகளை நிரந்தரமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் கருவிகளை அனைத்து வாகனங்களிலும் நிரந்தர அம்சமாக்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அதிகபட்ச வாகனங்களின் வேகம் ஒரு மணிநேரத்துக்கு 80 கிமீ ஆக திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிகளை நடைமுறை படுத்த புதிய சட்டங்களை இயற்றுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் போக்குவரத்து சட்டங்களை மிக கடுமையாக நடைமுறைபடுத்தவும் திட்டமிட்டுப்பட்டு வருகின்றது.