ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட டாடா ஸீக்கா கார் மாடலும் வருவது உறுதியாகியுள்ளது. ஸீக்கா காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் ஏஎம்டி வரலாம் என தெரிகின்றது.
செலிரியோ , ஐ10 போன்ற கார்களுக்கு போட்டியை ஏற்படுத்த உள்ள ஸீக்கா காரில் புதிய ரெவோட்ரான் மற்றும் ரெவோடார்க் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் இதில் 5 வேக ம்னுவல் கியர்பாக்சினை தவிர ஏஎம்டி எனஆட்டோமேட்டிக் மெனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனிலும் வரவுள்ளது.
1.05 லிட்டர் டீசல் என்ஜின் 69 பிஎச்பி ஆற்றல் மற்றும் 140என்எம் டார்க் வழங்க வல்லதாகும். 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 83.8 பிஎச்பி ஆற்றல் மற்றும் 114என்எம் டார்க் வழங்கும்.
நேர்த்தியான வடிவைப்பில் வந்துள்ள ஸீக்கா காரில் சிறப்பான இடவசதி மற்றும் தரமான கட்டுமானத்தை டாடா தந்துள்ளது. ஸெஸ்ட் செடான் காரில் முதன்முறையாக ஏஎம்டி கியர்பாக்சினை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து விலை குறைவான டாடா நானோ காரிலும் ஏஎம்டி மாடலை அறிமுகம் செய்தது.
மேலும் படிக்க ; டாடா ஸீக்கா காரின் முழுவிபரம்
நானோ ஜென்எக்ஸ் மாடலின் மொத்த விற்பனையில் 50% பங்குகளை ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் பெற்றுள்ளது. மற்ற நிறுவன ஏஎம்டி மாடல்களான செலிரியோ , ஆல்ட்டோ கே10 மற்றும் டியூவி300 போன்ற மாடல்களின் ஏஎம்டி கியர்பாக்சிற்கு சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளன.
ஆட்டோமேட்டிக் மற்றும் சிவிடி மாடல்களை விட குறைவான விலையில் சிறப்பான ஆட்டோமேட்டிக் அனுபவத்தினை தருவதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏஎம்டி மாடலை தேர்வு செய்கின்றனர். ஸீக்கா காரிலும் ஏஎம்டி வருவது உறுதியாகியுள்ளதால் ஜீக்கா காரின் வெற்றி ஓரளவு உறுதி செய்யப்பட்டுள்ளது.
[envira-gallery id=”3889″]