பிரைமா டிரக் பந்தயத்தில் மோத்தம் 6 அணிகள் பங்கேற்றன. அவை . கேஸ்ட்ரால் வெக்டான் குழு, கும்மின்ஸ் குழு , டாடா மோட்டார்ஸ்போர்ட்ஸ் குழு , டீலர் வேரியர்ஸ் குழு , டேர்டெவில்ஸ் டீலர் குழு , அலையட் பாட்னர்ஸ் குழு போன்றவை ஆகும்.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் கேஸ்ட்ரால் வெக்டான் அணியின் ஸ்டூவர்ட் ஆலிவர் முதலிடத்தினை பெற்றார். அவரை தொடர்ந்து அலையட் பாட்னர்ஸ் அணியின் ஸ்டீவ் தாமஸ் மற்றும் மூன்றாவது இடத்தை டாடா மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணியை சேர்ந்த ஸ்டீவன் பவெல் பெற்றார்.
ரேஸ் போட்டிக்காக 12 பிரைமா டிரக்குள் 8.9 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதன் ஆற்றல் 375எச்பி மற்றும் டார்க் 1550என்எம் ஆகும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 130கிமீ ஆகும்.
வாப்கோ , ஜெகே டயர்ஸ், கம்மின்ஸ் கேஸ்ட்ரால் மற்றும் டாடா டெக்னாலஜீஸ் போன்ற நிறுவனங்கள் முக்கிய ஸ்பான்சர்களாக திகழ்ந்தனர்.