டாடா ஏஸ் மேஜிக் சிறிய ரக வர்த்தக வாகனம் 3 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. டாடா ஏஸ் மேஜிக் கடந்த 2007ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது.
![]() |
டாடா ஏஸ் மேஜிக் |
ஏஸ் மினி டிரக்கின் அடிப்படையில் உருவான ஏஸ் மேஜிக் பயணிகள் பிரிவு வாகனத்தில் முதலாவதாக விற்பனைக்கு வந்தது. சிஎன்ஜி மற்றும் டீசல் என மொத்தம் 4 வேரியண்டில் கிடைக்கின்றது.
சிறிய ரக பொது போக்குவரத்தில் 85% பங்கினை ஏஸ் மேஜிக் பெற்றுள்ளது. இதில் மேஜிக் டீசல் , மேஜிக் சிஎன்ஜி , மேஜிக் ஐரிஸ் டீசல் மற்றும் மேஜிக் ஐரிஸ் சிஎன்ஜி என மொத்தம் 4 விதமான வேரியண்டில் கிடைக்கின்றது.
சிறிய நகரங்களுக்கு இடையில் செயல்பட்டு வரும் இந்த பொது போக்குவரத்து மேஜிக் வாகனம் ராஜஸ்தான் , ஓடிசா , கர்நாடகா , மத்தியப்பிரதேஷம் , பீகார் , ஆந்திரா மற்றும் மஹாராஷ்ட்டிரா போன்ற மாநிலங்களில் அதிகம் விற்பனை ஆகியுள்ளது.
ஆட்டோகளுக்கு மாற்றாக ஏஸ் மேஜிக் செயல்பட்டு வருகின்றது. மேஜிக் இந்தியா மட்டுமல்லாமல் 20க்கு மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
Tata Ace Magic crosses 3Lakh sales mark