டாடா நிறுவனத்தின் இன்டிகா இவி2 காருக்கு சிறப்பு கடன் திட்டம் மற்றும் விலை குறைப்பு செய்துள்ளது. இண்டிகா eV2 காரினை மாருதி வேகன் ஆர் காருடன் ஒப்பீடு செய்து இன்டிகா காரின் சிறப்புகளை தனித்து காட்டியுள்ளது.
ரூ 6542 மாத தவனையில் இன்டிகா இவி2 காரை வாங்கும் வகையில் புதிய கடன் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
ரூ 45,000 வரை இண்டிகா இவி2 காரின் விலையை குறைத்துள்ளது. ரூ 4.58 லட்சத்திலிருந்து ரூ 4.15 லட்சமாக குறைத்துள்ளது.
பிஎஸ் 4 மாடல் ஆரம்ப விலை ரூ 4.15 லட்சம் மற்றும் பிஎஸ் 3 மாடல் ஆரம்ப விலை ரூ 3.87 லட்சம் ஆகும்.
மிக அதிகப்படியாக விற்பனையாகும் வேகன்ஆர் காருடன் இண்டிகா காரினை ஒப்பீட்டு இதன் மைலேஜ், என்ஜின் ஆற்றல் , ஆலாய் வீல் மற்றும் வாரண்டியினை குறிப்பிட்டுள்ளது. இந்த விவரங்களை மேலே உள்ள படத்தின் மீது சொடுக்கி கானுங்கள்,