நிசான் நிறுவனத்தின் பட்ஜெட் பிராண்டான் டட்சன் ரெடி-கோ கார் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன என்பதனை பற்றி தெரிந்து கொள்ளலாம். டட்சன் ரெடி-கோ நாளை அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வருகின்றது.
ரெனோ -நிசான் கூட்டணியில் உருவான CMF-A பிளாட்பாரத்தில் உருவாக்கப்பட்ட இரண்டாவது மாடலாக ரெடி-கோ வந்துள்ளது. முதல் மாடல் பிரசத்தி பெற்ற ரெனோ க்விட் காராகும். க்விட் கார் 1,25,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது.
டட்சன் ரெடி-கோ கார் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
1. ரெனோ -நிசான் கூட்டணியில் உருவான CMF-A தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள ரெடி-கோ மிக சிறப்பான க்ராஸ்ஓவர் கார்களுக்கு இனையான தாத்பரியங்களுடன் அமைந்துள்ளது. க்விட் காரை விட மிக உயரமாக டால் பாய் ஹேட்ச்பேக் கார் போன்ற அமைப்பினை ரெடி-கோ பெற்றுள்ளது.
2. க்விட் காரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 800சிசி என்ஜின் மற்றும் 5 வேக கியர்பாக்ஸ் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பினை ரெடி-கோ பெற்றுள்ளது.
3. 54 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 800சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 72Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. ரெடி-கோ காரின் மைலேஜ் லிட்டருக்கு 25.17 கிமீ ஆகும்.
4. இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார்கள் வரிசையில் டட்ஸன் ரெடி-கோ காரும் இணைந்துள்ளது. க்விட் காரின் மைலேஜூம் லிட்டருக்கு 25.17 கிமீ ஆகும்.
5. தாரளமான இடவசதி கொண்ட இருக்கைகளுடன் சிறப்பான டேஸ்போர்டினை பெற்றுள்ளது. உட்புறத்தில் முன் இருபக்க வீன்டோகளுக்கும் பவர் வீன்டோஸ் சேர்க்கப்பட்டுள்ளது. க்விட் காரை போல தொடுதிரை அமைப்பினை பெறவிட்டாலும் ஆடியோ சிஸ்டத்தில் ரேடியோ ,சிடி , யூஎஸ்பி ,ஆக்ஸ் தொடர்புகளை பெறலாம்.
6. ரெடி-கோ காரில் D, A, T, T(O) மற்றும் S என மொத்தம் 5 வேரியண்ட்களில் கிடைக்கும். மேலும் ஈசி கிட் – ஸ்போர்ட் , ஈசி கிட் -பிரிமியம் , கூல் கிட் , அர்பன் கிட் மற்றும் ஸ்டைல் கிட் என மொத்தம் 5 விதமான துனைகருவிகள் ஆப்ஷனை பெற்றுள்ளது.
7. டாப் S வேரியண்டில் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்கு , முன் இருபக்க வீன்டோகளுக்கும் பவர் வீன்டோஸ் , ஆடியோ சிஸ்டத்தில் ரேடியோ ,சிடி , யூஎஸ்பி ,ஆக்ஸ் தொடர்புகளுடன் ஓட்டுநருக்கான காற்றுப்பை மட்டுமே பெற்றுள்ளது. மற்ற வேரியண்ட்களில் காற்றுப்பை இல்லை.
ரெடி-கோ vs க்விட் vs ஆல்ட்டோ 800 vs இயான் – ஒப்பீடு
8. நகர்புறத்திற்கு ஏற்ற மாடலாக நிலை நிறுத்தப்பட்டுள்ள ரெடி-கோ காரில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பேஸ் மற்றும் லைம் கீரின் , வெள்ளை ,சில்வர் , சிவப்பு மற்றும் கிரே போன்ற வண்ணங்களில் கிடைக்கும்.
9. டட்ஸன் ரெடி-கோ காரின் தொடக்க விலை ரூ.2.39 லட்சமாகும். மற்ற வேரியண்ட்கள் விலை நாளை வெளியாகும்.
10 . மிக கடுமையான போட்டி நிறைந்த தொடக்க நிலை ஹேட்ச்பேக் பிரிவில் க்விட் , இயான் , ஆல்ட்டோ 800 , டாடா ஜென்எக்ஸ் நானோ போன்ற கார்களுக்கு மிகுந்த சவாலாக விளங்கும்.
Datsun Redi-Go photo gallery
[envira-gallery id=”7303″]