இந்தியாவின் மிக விலை குறைவான 7 நபர்கள் அம்ந்து செல்லக்கூடிய ட்டசன் கோ ப்ளஸ் எம்பிவி கார் விற்பனைக்கு வந்துள்ளது. மிக மலிவான விலையில் சற்று கூடுதலான இடவசதி கொண்ட காராக கோ ப்ளஸ் விளங்கும்.
கோ பொதுவறை சீருந்து காரினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கோ ப்ளஸ் எம்பிவி காரானது. 7 நபர்கள் அமர்ந்து செல்லும் வகையில் உருவாக்கியுள்ளனர்.
என்ஜின்
கோ+ சீருந்தில் 1.2 லிட்டர் 3 கலன் கொண்ட பெட்ரோல் விசைப்பொறி பொருத்தியுள்ளனர். இதன் குதிரைதிறன் ஆற்றல் 67பிஎச்பி மற்றும் டார்க் 104 என்எம் ஆகும். 5 வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தியுள்ளனர்.
பாதுகாப்பு அம்சங்கள்
கோ ப்ளஸ் கார் மிகவும் குறைவான பாதுகாப்பு வசதிகளை பெற்றுள்ளது. ஏபிஎஸ் பிரேக் இல்லை, டீ மாடலில் ஓட்டுனர் காற்றுப்பை விரும்பினால் ஆப்ஷனலாக பெற்றுக்கொள்ளலாம்.
கோ ப்ளஸ் கார் மைலேஜ் லிட்டருக்கு 20.6 கிமீ ஆகும்
கோ ப்ளஸ் கார் விலை
கோ + டி — ரூ. 3.80 லட்சம்
கோ + டி1 — ரூ. 3.82 லட்சம்
கோ + ஏ — ரூ. 4.15 லட்சம்
கோ + டீ — ரூ. 4.61 லட்சம்
(ex-showroom delhi)
மேலும் வாசிக்க: டட்சன் கோ ப்ளஸ் ரிவியூ
Datsun launched Go + Mpv car in India