ஹூண்டாய் நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்டான் ஜெனிசிஸ் பிராண்டில் 2020 வரை வெளியாக உள்ள கார்களின் முக்கிய திட்ட விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் செடான் , கூபே , எஸ்யூவி என மொத்தம் 5 கார்கள் உள்ளன.
ஆடி , பிஎம்டபிள்யூ , மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற சொகுசு கார்களுக்கு இணையாக போட்டியை ஏற்படுத்தும் நிலையில் உருவாக்கப்பட்டு வரும் ஜெனிசிஸ் பிராண்டில் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2 செடான் கார்கள் , 2 எஸ்யூவி கார்கள் , 1 கூபே ரக காரும் எதிர்கால திட்ட வரைவில் உள்ளது.
G80 , G70 என்ற பெயரில் இரு சொகுசு செடான் கார்கள் 2017 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது. அதனை தொடர்ந்து சொகுசு எஸ்யூவி கார் ஒன்றும் விற்பனைக்கு வருகின்றது. மேலும் 2020 ஆம் ஆண்டில் கூடுதலாக ஒரு சொகுசு எஸ்யூவி மற்றும் கூபே ரக சொகுசு காரும் விற்பனைக்கு வரவுள்ளது.
என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் எந்த தளத்தில் இந்த கார்கள் உருவாக்கப்பட உள்ளன போன்ற எந்த விபரங்களும் இதுவரை வெளியாகவில்லை.
[envira-gallery id=”4179″]
உதவி : thekoreancarblog