ஹூண்டாய் நிறுவனம் ஜெனிசிஸ் (Genesis) என்ற பெயரில சொகுசு கார்களுக்கான பிராண்டினை அறிமுகம் செய்துள்ளது. ஜெனிசிஸ் பிராண்டில் சொகுசு கார்கள் தயாரிக்கப்படும்.
ஹூண்டாய் N என்ற பெயரில் பெர்ஃபாமென்ஸ் ரக கார்களுக்கு சிறப்பு பிரிவினை தொடங்கியது. அதனை தொடர்ந்து ஜெனிசிஸ் என்ற பெயரில் முதலில் சொகுசு காரினை அறிமுகம் செய்தது. தற்பொழுது ஜெனிசிஸ் பெயரை பிராண்டு பெயராக மாற்றியுள்ளது.
ஹூண்டாய் ஜெனிசிஸ் மற்றும் ஜெனிசிஸ் கூபே என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட செடான் மற்றும் கூபே கார்கள் பெயர் மாற்றப்படலாம்.
ஜெனிசிஸ் லோகோ |
2020 ஆம் ஆண்டிற்க்குள் 6 கார் மாடல்களை ஜெனிசிஸ் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இவற்றில் செடான் , கூபே மற்றும் எஸ்யூவி கார் மாடல்களையும் களமிறக்க உள்ளது. அமெரிக்காவில் அடுத்த வருடத்தில் ஜெனிசிஸ் விற்பனை தொடங்குகின்றது.
Hyundai Motor launches new Genesis luxury brand