ட்ரையல்பிளேசர் எஸ்யூவி
கேப்டிவா மிக குறைவான விற்பனை எண்ணிக்கையை பதிவுசெய்து வரும் நிலையில் கேப்டிவா காருக்கு மாற்றாக ஃபார்ச்சூனர் , சான்டா ஃபீ, என்டோவர் , மற்றும் பஜீரோ ஸ்போர்ட் போன்ற கார்களுக்கு நேரடியான போட்டியாக ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி விளங்கும்.
2.5 லிட்டர் என்ஜின்(150பிஎச்பி) அல்லது 2.8 லிட்டர் என்ஜின் (180பிஎச்பி) என இரண்டில் ஒன்று பொருத்தப்பட்டு இந்தியாவில் ட்ரையல்பிளேசர் விற்பனைக்கு வரவுள்ளது.
7 இருக்கைகள் கொண்ட ட்ரையல்பிளேசர் எஸ்யூவி இன்னும் சில மாதங்களில் பாகங்களை இறக்குமதி செய்து கட்டமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.
ஸ்பின் எம்பிவி
என்ஜாய் எம்பிவி காரின் விற்பனை எதிர்பார்த்த இலக்கினை அடையாத காரணத்தினால் என்ஜாய் காருக்கு மாற்றாக ஸ்பின் எம்பிவி காரினை 2016 ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வருவதினை உறுதி செய்துள்ளது.
7 இருக்கைகள் கொண்ட ஸ்பின் எம்பிவி தற்பொழுது தீவர சோதனை ஓட்டத்தில் உள்ளது. எர்டிகா , மொபிலியோ , வரவிருக்கும் ரெனோ லாட்ஜி போன்ற கார்களுக்கு சவாலினை தரவல்ல காராக ஸ்பின் விளங்கும்.
செலர்லே பீட் காரின் ஜிஎம் காமா II தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்பின் மிக சிறப்பான இடவசதி கொண்ட மாடலாக விளங்குவதனால் இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்பினை பெறும்.
ஸ்பின் ஏக்டிவ் என்ற பெயரில் பாடி க்ளாடிங், ஆலாய்வீல் டைல்கேட்டில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்ட கிராஸ்ஒவர் மாடலை மற்ற நாடுகளிலும் விற்பனை செய்து வருகின்றது.
இழந்த சந்தையை புதுப்பிக்கும் நோக்கில் செவர்லே நிறுவனம் புதிய மாடல்களை களமிறக்குகின்றது.