ஜிஎம் இந்தியா பிரிவின் செவர்லே நிறுவனம் தசரா மற்றும் தீபாவளி பண்டிகை ஓட்டி அனைத்து கார்களுக்கும் சிறப்பு விலை சலுகை , 4 கிராம் தங்க நானயம் என பல அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.
செவர்லட் க்ரூஸ், பீட் , என்ஜாய் , டவேரா மற்றும் செயில் என 5 மாடலுகளுக்கும் 1 வருட வாகன காப்பீடு , சிறப்பு எக்ஸ்சேஞ்ச் போனஸ் , ரூ.50,000 வரையிலான சலுகை மற்றும் கேஸ் பெனிபிட் மற்றும் அனைத்து கார்களுக்கும் 4 கிராம் தங்க நானயம் நிச்சிய பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாடல் | Exchange bonus | Cash benefits | Total |
க்ரூஸ் | Rs. 50,000 | Rs. 50,000 | Rs. 1,12,000 |
பீட் | Rs. 20,000 | Rs. 24,000 | Rs. 74,000 |
டவேரா | Rs. 15,000 | Rs. 25,000 | Rs. 52,000 |
செயில் | Rs. 20,000 | Rs. 20,000 | Rs. 72,000 |
என்ஜாய் | Rs. 20,000 | Rs. 7,500 | Rs. 62,000 |
சிறப்பு சலுகை குறித்து செவர்லே கூறுகையில் வாடிக்கையாளர்களுக்கு மிக சிறப்பான அனுபவத்தினை பண்டிகை காலத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் வாயிலாக பெறலாம். செவர்லே கார்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக திருப்தியான அனுபவத்தினை வழங்கும் என தெரிவித்துள்ளது.