இந்தியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் சென்னை மாநகரம் கடும் மழை பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல சிறு , குறு தொழில்களை தொடர்ந்து ஆட்டோமொபைல் துறை முடங்கியுள்ளது.
ஹூண்டாய் , போர்டு , ரெனோ – நிசான் , டெய்மலர் , ஜஷர் , ராயல் என்பீல்டு , யமஹா , பிஎம்டபிள்யூ , அப்பல்லோ டயர் போன்ற முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களும் கனத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்கள் வருவதில் மிகுந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கார் ,பைக் மற்றும் உதிரிபாகங்ள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 1ந் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.
மேலும் உற்பத்தி செய்யப்பட்டு டெலிவரி மற்றும் ஏற்றுமதிக்காக காத்திருக்கும் வாகனங்களும் சாலைகளின் நிலை மோசமடைந்துள்ளதாலும் சென்னை துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட உள்ள பல கார்களும் காத்திருக்கின்றன.
மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ள க்ரெட்டா மற்றும் க்விட் கார்கள் சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த கார்களுக்கு முன்பதிவு 70,000க்கு மேல் உள்ளதாலும் உற்பத்தி செய்ய முடியா நிலையில் நிறுவனங்கள் உள்ளதால் காத்திருப்பு காலம் மேலும் அதிஎரிக்கும்.
இந்திய ஆட்டோமொபைல் துறையில் சென்னை உற்பத்தியில் இரண்டாமிடத்தில் உள்ளது. சென்னை மழையால் சுமார் 1200 கோடி ரூபாய் முதல் ரூபாய் 1500 கோடி வரை இழப்பீனை ஏற்ப்படுத்தியுள்ளது. இன்னும் அதிக கனமழைக்கு மேலும் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை நிலையம் அறிவித்துள்ளது.
Chennai auto industries production halted