டாடா பஸ் ஷோன் முதல் சேவை மையத்தை ஜனதா குழுமம் சென்னை அருகம்பாக்கத்தில் தொடங்கியுள்ளது. இந்த சேவை மையம் பேருந்துகளுக்கான சிறப்பு சேவை மையமாக செயல்படும். இந்த டீலரில் 3S வசதி உள்ளது.
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 572 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஷோரூமில் பேருந்து டிஸ்பிளேவுக்கு மட்டும் 111சதுர மீட்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. 24×7 மணிநேரமும் சேவை வழங்கப்பட்ட உள்ளது. ஒரேசமயத்தில் 12 பேருந்துகளுக்கான பேவினை கொண்டுள்ள இந்த ஷோரூமில் வை ஃபை வசதி , வாடிக்கையாளர் ஓய்வறை , கான்ஃபிரன்ஸ் ஹால் போன்ற வசதிகள் உள்ளன.
பேருந்து வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்தியாவின் முதல் பஸ் ஷோன் சேவையை மையத்தினை டாடா மோட்டார்ஸ் தொடங்கியுள்ளது. இந்த மையத்தின் வாயிலாக விற்பனை , சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்களை பெறஇயலும்.
காஞ்சிபுரம் , திருவள்ளுவர் , வேலூர் , விழுப்புரம் , கடலூர் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களுக்கு இந்த சேவைமையத்தின் வாயலாக சேவை வழங்கப்பட உள்ளது.
Tata Motors opens exclusive BUS Range Dealership in Chennai: BUSZONE