ரெனோ இந்திய நிறுவனம் க்விட் காரின் அறிமுகத்திற்கு பின்னர் மாபெரும் வளர்ச்சியாக ஒட்டுமொத்த சந்தையில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஹோண்டா நிறுவனம் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 2015 ஆண்டினை கடந்த ஏப்ரல் 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பீட்டால் 211 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 2015யில் 4001 கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்த மாத ஏப்ரல் 2016யில் 12,426 கார்கள் விற்பனை ஆகியுள்ளது.
மாருதி சுஸூகி , ஹூண்டாய் , மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனங்களை தொடர்ந்து ரெனோ நிறுவனம் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தொடக்க நிலை ஹேட்ச்பேக் காராக மிக சவாலான விலையில் மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு போட்டியாக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களுடன் கூடுதல் வசதிகள் மற்றும் இடவசதி கொண்ட மாடலாக வந்த ரெனோ க்விட் 1,50,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது. மாதம் 10,000 கார்கள் என்ற உற்பத்தி இலக்கினை எட்டியுள்ள க்விட் காருக்கு காத்திருப்பு காலம் 6 மாதம் வரை நீண்டுள்ளது.
அடுத்த சில மாதங்களில் வரவுள்ள ரெனோ க்விட் 1.0 லிட்டர் என்ஜின் மற்றும் க்விட் ஏஎம்டி மாடல்கள் ரெனோ நிறுவனத்துக்கு கூடுதல் பலமாக அமையும். மேலும் க்விட் காரின் தளத்திலே உருவாக்கப்பட்டுள்ள நேரடியான போட்டி காரான டட்சன் ரெடி கோ அடுத்த மாதம் மத்தியில் வின்பனைக்கு வரவுள்ளது.