கோவை மாநகரில் புதிய உதயமாக இன்று கவாஸாகி சூப்பர் பைக்குகளுக்கான பிரத்யேக விற்பனையகம் அவிநாசி சிடிஎஸ் டவர்ஸ்யில் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இரண்டாவது மற்றும் இந்தியாவின் 12வது கவாஸாகி ஷோரூம் ஆகும்.
சூப்பர் பைக் பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதனால் பரவலாக அனைத்து சூப்பர் பைக் தயாரிப்பாளர்களும் தங்கள் சேவையை விரிவுபடுத்தி வருகின்றனர். 2300சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஷோரூமில் 630 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள பிரத்யேக சர்வீஸ் மையத்தில் சிறப்பான அனுபவமுள்ள பணியாளர்களை கொண்டு இயக்கப்பட உள்ளது.
விற்பனை , சர்வீஸ் , உதிரிபாகங்கள் மற்றும் சிறப்பான வாடிக்கையாளர் சேவையை வழங்கும் வகையில் பயற்சி பெற்ற பணியாளர்களை கொண்டு இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் திறப்பு விழாவில் இந்திய பிரிவு நிர்வாக இயக்குனர் திரு.யுக்தா பேசுகையில் கோவை வாடிக்கையாளர்கள் சிறப்பான பைக்குகளை தேர்ந்தேடுக்கவும் வாடிக்கையாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும். மேலும் விற்பனையை அதிகரிக்கும் இன்னும் பல மையங்களை திறக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார். 12 மாடல்களை இந்திய சந்தையில் கவாஸாகி நிறுவனம் விற்பனை செய்கின்றது.
கோவை கவாஸாகி முகவரி ;