ஏப்ரிலியா கேப்னோர்டு 1200 பைக் ஏப்ரிலியாவின் என்ட்ரி லெவல் சாகச பைக் கடந்த ஆண்டு ECIMA இத்தாலி மோட்டார்சைக்கிள் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஏப்ரிலியாவின் டோர்சொடுரா 1200 சூப்பர்மோட்டோ பைக்கினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாகும். இதில் பயன்படுத்தப்பட்ட எஞ்சின்தான் கேப்னோர்டு 1200 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
1200சிசி எல்-டிவின் எஞ்சின் பயன்படுத்தியுள்ளனர். இந்த எஞ்சின் 128பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும்.இதன் டார்க் 116 என்எம் ஆகும். இந்த பைக் ஏரோடைனமிக் சிறப்பம்சம் கொண்டதாகும்.
ஏப்ரிலியா கேப்னோர்டு 1200 பைக் 2 வேரியன்டில் கிடைக்கின்றது. அவை கேப்னோர்டு 1200 பைக் மற்றும் கேப்னோர்டு 1200 டிராவல் பைக்.
ஏப்ரிலியா கேப்னோர்டு 1200 பைக் விலை; ரூ 15.08 இலட்சம்.
ஏப்ரிலியா கேப்னோர்டு 1200 டிராவல் பைக் விலை; ரூ 16.87 இலட்சம்
தற்பொழுது முன்பதிவு நடைபெறுகின்றதாம். வருகிற மே மாதம் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.