விபத்தினை பெருமளவு தடுக்கும் வகையில் ஓட்டுரின் மன அழுத்தம் , கவனகுறைவு , மன அலைகள் போன்றவற்றை கண்காணிக்கும் வகையில் மைன்ட் சென்ஸ் நுட்பம் உருவாக்கப்படுகின்றது.
மனித மூளை தொடர்ந்து அலைகளை அனுப்பி கொண்டு இருக்குமாம் மேலும் ஸ்டீயரிங் வீல் மூலம் கைகளில் உள்ள உணர்வினை பெற்று அந்த அலைகளை சென்சார் உதவியின் மூலம் ஆய்வு செய்து அதற்கேற்ப ஓட்டுநரின் கவனத்தினை கவனிக்கும் வகையில் ஜெஎல்ஆர் உருவாக்கி வருகின்றது,.
சாரதியின் கவனம் சிதறினாலோ , தூங்க தொடங்கினாலோ ஸ்டீயரிங் மற்றும் பெடல்களில் அதிர்வுகளை ஏற்படுத்தி அதன் மூலம் ஓட்டுநருக்கு எச்சரிக்கை செய்து ஓட்டுநரின் கவனத்தினை கொண்டு வரும் வகையில் நுட்பத்தினை பற்றி Dr.வூல்ஃப்கேங் எப்பிள் விளக்கியுள்ளார்.
ஜாகுவார் XJ காரில் மைன்ட் சென்ஸ் நுட்பத்தினை சோதனை செய்து வருகின்றது.
இரண்டு புதிய நுட்பங்கள் ரேஞ்ச்ரோவர்
JLR Mind Sense can monitor driver mind