மஹாராஷ்டிரா : எலக்ட்ரிக் கார்களுக்கு எவ்விதமான மதிப்பு கூட்டப்பட்ட வரியும் இனி இருக்காது என மஹாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது. மஹிந்திரா ரேவா இ2ஓ கார் இதன் மூலம் பலனடையும்.
எலக்ட்ரிக் கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் எதிர்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் எலக்ட்ரிக் கார்களின் விற்பனையை அதிகரிப்பதே இதன் தீர்வாகும் என்பதனால் அந்த முயற்சியை மஹாராஷ்டிரா தொடங்கியுள்ளது.
மதிப்பு கூட்டு வரி (VAT), சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் போன்றவை இல்லாமல் இனி எலக்ட்ரிக் கார்களை வாங்க இயலும். இதுகுறித்து மத்திய நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்துறை இணையமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில் எலக்ட்ரிக் கார்களுக்கு வரிகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும் எனற கோரிக்கையை மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மஹிந்திரா ரேவா E20 எலக்ட்ரிக் கார் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது . வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் வெரிட்டோ செடான் எலக்ட்ரிக் கார் வரவுள்ளது.
தற்பொழுது ரேவா இ2ஓ காரின் விலை ரூ.5 லட்சம் ஆகும் ஆனால் வரி போன்றவற்றி இதன் விலை மிகவும் அதிகரிக்கின்றது. மாதம் சுமார் 75 ரேவா கார்கள் விற்பனை ஆகின்றது. இதனை 2500 ஆக அதிகரிக்க மஹிந்திரா திட்டமிட்டு வருகின்றது.