அமெரிக்காவின் எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்ப விவரங்களை பெற்றுவந்த ஹீரோ மோட்டோகார்ப் தற்பொழுது எரிக் புயெல் ரேஸ் நிறுவனத்தின் 49.2 சதவீத பங்குகளை கைப்பற்றியுள்ளது.
ஹோண்டா மற்றும் ஹீரோ பிரிந்த பின்னர் தொழில்நுட்ப உதவிகளுக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு எரிக் புயெல் நிறுவனத்துடன் ஹீரோ கைகோர்த்தது. 49.2 % பங்குகளின் மொத்த மதிப்பு 25 மில்லியன் டாலர்கள் ஆகும். இவற்றில் 15 மில்லியன் டாலர்களை ஹீரோ செலுத்திவிட்டது. மீதமுள்ள 10 மில்லியன் டாலர்கள் இன்னும் 9 மாதங்களில் செலுத்த உள்ளது.
ஹீரோ மற்றும் எரிக் புயெல் கூட்டணியில் புதிய ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்கள் வெளிவரும்