எம்வி அகஸ்டா புரூட்டேல் 800 ட்ராக்ஸ்டேர் |
எம்வி அகஸ்டா என்பதன் விளக்கம் மெக்கேனிக்கா வெர்க்ஹிரோ அகஸ்டா ஆகும். 1945ம் ஆண்டு முதல் எம்வி அகஸ்டா செயல்பட்டு வருகின்றது. இந்தியாவின் கைனெட்டிக் நிறுவனத்துடன் இணைந்து சூப்பர் பைக்குகளை வரும் நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
நாட்டில் உள்ள முன்னணி நகரங்களில் சிறப்பான சேவை மற்றும் சர்வீஸ் வழங்கும் வகையில் அமைக்கும் முயற்சியில் கைனெட்டிக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவில் முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாகவோ அல்லது பாதி வடிவமைக்கப்பட்டு மீதி பாகங்களை இங்கே வடிவமைத்து விற்பனை செய்யப்படும் செமி-நாக்டூ டவுன் முறையிலோ விற்பனைக்கு வரலாம்.
எம்வி அகஸ்டா சூப்பர் பைக் மாடல்கள் புரூட்டேல் 675 , புரூட்டேல் 800 , புரூட்டேல் 1090 , புரூட்டேல் 800 ட்ராக்ஸ்டேர் , எஃப்4 , எஃப்3 800, எஃப்3 675 , ரைவல் மற்றும் டூரிஷ்மோ வெலாஸ் 800 போன்ற சூப்பர் பைக் மாடல்கள் இந்தியாவிற்க்கு வரவுள்ளன.
அனைத்து மாடல்களும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் இந்திய சந்தையை வந்தடையும். முதற்கட்டமாக வரும் நவம்பரில் விற்பனை தொடங்கப்பட உள்ளது.
எம்வி அகஸ்டா பைக்குகளின் விலை ரூ.12 லட்சத்தில் தொடங்கி 33 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.
MV Agusta super bikes India launch confirmed