AUTOMOBILE (Automotive) தமிழில் வாகனவியல்
ஆட்டோமொபைல் என்றால் தானாக சக்தியை உற்பத்தி செய்து இயங்கும் இயந்திரம் ஆகும்.
வாகனங்களின் இதயம் என்றால் அது என்ஜின் என்பதற்கு மாற்று கருத்து இல்லை. ஒவ்வொரு வாகனமும் இயங்குவதற்கான ஆற்றலை (உயிரை) தருவது என்ஜின் ஆகும். என்ஜின் எனப்படுவது வாகனத்தின் சக்தி உற்பத்தி ஆலையாகும். என்ஜின் இயங்குவது எப்படி என்று தெரிந்து கொள்வதற்க்கு முன் என்ஜின் பாகங்கள் மற்றும் எஞ்சின் வகைகள் பற்றி அறிந்து கொள்வோம்.
என்ஜின் அடிப்படை வகைகள்
1. எரிதல் அடிப்படையில்(based on combustion)
அ. வெளிப்புற எரிதல்(external combustion engine)
பயன்பாட்டில் இல்லை
ஆ. உட்ப்புற எரிதல்(internal combustion engine)
அனைத்து வாகனங்களிலும்..
2. எரிபொருள் அடிப்படையில் (fuel based)
டீசல், பெட்ரோல், எல்பிஜி, இன்னும் பிற…
3. பயன்பாட்டின் அடிப்படையில்(application based)
ஆட்டோமொபைல் என்ஜின்,ராக்கெட் என்ஜின், நிலையான என்ஜின்,இன்னும் பிற…
உட்ப்புற கட்டமைப்பு(inline), V கட்டமைப்பு, W கட்டமைப்பு…
குறிப்பு ; 2012 ஆம் ஆண்டு நமது தளத்தில் வெளியான என்ஜின் இயங்குவது எப்படி ? பகிர்வின் மேம்பட்ட பகிர்வாகும்.