இந்தியாவின் மிக வேகமாக விற்பனையாகும் எஸ்யூவி கார் என்றால் அது எக்ஸ்யூவி500 கார்தான். மிக குறைந்த காலத்திலே 50,000 வாகனங்களை விற்பனை செய்தது.
மஹிந்திரா எக்ஸயூவி 500 கார்களுக்கு மிக சவாலாக ரெனால்ட் டஸ்ட்டர் விளங்கும். மேலும் விரைவில் வெளிவர உள்ள ஈக்கோஸ்போர்ட் இன்னும் சவாலினை தரும். எனவே இவற்றை சமாளிக்க மஹிந்திரா தீவரமான முயற்சியில் களமிறங்கியுள்ளது.
மஹிந்திரா எக்ஸயூவி 500 எஸ்யூவி காரில் இரண்டு விதமான மாறுபட்ட வகையினை வெளியிட உள்ளது. அவற்றில் தற்பொழுது உள்ள மாறுபட்ட வகையை விட குறைவான வேரியண்டாக ஒன்றும் மற்றொன்று மிக உயர்வான வேரியண்ட்யாக இருக்கும்.