சர்வதேச அளவில் முதன்முறையாக வரத்தகரீதியான பறக்கும் கார் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. PAL-V லிபிர்ட்டி பறக்கும் காரின் ஆரம்ப விலை ரூ. 2.52 கோடி ஆகும். முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் டெலிவரி 2018ம் ஆண்டின் இறுதியில் வழங்கப்பட உள்ளது.
பறக்கும் கார்
டச் நாட்டை சேர்ந்த PAL-V நிறுவனம் வடிவமைத்துள்ள லிபர்ட்டி ஸ்போர்ட் மற்றும் லிபர்ட்டி பாய்னியர் என இரு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. மூன்று சக்கரங்களுடன் இரு இருக்கைகளை கொண்டுள்ள இந்த மாடல்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 179 கிமீ ஆகும்.
- PAL-V லிபர்ட்டி ஸ்போர்ட் – ரூபாய் 2.52 கோடி ($3,99,000)
- PAL-V லிபர்ட்டி பாய்னியர் – ரூபாய் 3.78 கோடி ($5,99,000)
பறக்கும் நிலையிலிருந்து சாலை நிலைக்கு மாற 5 முதல் 10 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளும். இரு எஞ்சின்களை பெற்றுள்ள இந்த கார்களில் பறக்கும் நிலையில் ரோடார் எஞ்சினும் , சாலை நிலைக்கு ஏற்ற எஞ்சினும் கொடுக்கப்பட்டுள்ளது.
எந்த இடத்திலிருந்தும் பறக்கும் தன்மை கொண்ட இந்த பால் வி வாகனங்களில் சாதரன சாலை போக்குவரத்து சமயத்தில் 100.3 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் செயல்பாட்டில் இருக்கும். இதன் அதிபட்ச வேகம் மணிக்கு 160 கிமீ மற்றும் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்ட 9.0 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். லிட்டருக்கு 10.97 கிமீ மைலேஜ் தரும்..முழுமையாக எரிபொருள் நிரப்பியிருந்தால் சாலையில் 1314 கிமீ வரை பயணிக்கலாம்.
பறக்கும் உயரம் அதிகபட்சமாக 3500 மீட்டர் வரை மேலே செல்ல இயலும். இதில் 200 ஹெச்பி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக மணிக்கு 169 கிமீ வேகத்தில் பறக்கும் தன்மை கொண்ட இந்த கார்கள் 498 கிமீ வரை இயக்கலாம்.