உலகின் மிக உயரமான போக்குவரத்து சாலையான கார்டுங் லா கணவாய் சாலையில் பயணித்து யோ பைக்ஸ் எல்க்ட்ரிக் ஸ்கூட்டர் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
யோ பைக்ஸ் எல்க்ட்ரிக் |
யோ பைக்ஸ் (YOBYKES) எல்க்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சோலார் சக்தி மூலம் இயங்கும் இந்தியாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வடிவமைக்கும் எலக்ட்ரோதெர்ம் நிறுவனத்தின் அங்கமாகும்.
18,380 அடி உயரத்தில் அமைந்துள்ள கார்டுங் லா கணவாய் ந்ப்ரா பள்ளதாக்கு மற்றும் லடாக் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சாலை இந்திய ராணுவத்திற்க்கு முக்கிய போக்குவரத்து சாலையாகும்.
யோ பைக்ஸ் மற்றும் குளோபல் ஹிமாலயன் எக்ஸ்பிடேஷன் குழுவும் இணைந்த இந்த சாதனையை 4 மணி நேரம் 12 நிமிடத்தில் சாதித்துள்ளது. இதில் ஸ்கூட்டர் சார்ஜிங்கும் அடங்கும்.
இந்த பயணித்தின் நோக்கம் சோலார் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பிரபலப்படுத்தும் நோக்கில் நடைபெற்றுள்ளது. உயரமான மோட்டார் சாலையில் ஏறி முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரை யோ பைக்ஸ் பெற்றுள்ளது.