உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆட்டோ பிராண்டாக பட்டியலில் ஃபெராரி சூப்பர் கார் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. டாப் 100 ஆட்டோ பிராண்டு வரிசையில் இந்தியாவின் 7 பிராண்டுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஆட்டோ பிராண்டு
டாப் 100 ஆட்டோ பிராண்டுகளில் அதிக மதிப்புமிக்க பிராண்டாக டொயோட்டா நிறுவனம் முதலிடத்தை பெற்று $46,255 டாலர் பிராண்டு மதிப்பினை கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து பிஎம்டபிள்யூ நிறுவனம் 2வது இடத்தில் $37,124 டாலர் பிராண்டு மதிப்புடன் விளங்குகின்றது. மூன்றாவது இடத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் $35,544 டாலர் பிராண்டு மதிப்பில் உள்ளது.
சக்திவாய்ந்த பிராண்டாக விளங்குகின்ற ஃபெராரி முதலிடத்திலும் இரண்டாம் இடத்தில் போர்ஷே நிறுவனமும் விளங்குகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவனையின் வாயிலாக அதிகம் மதிப்புமிக்க முதல் 10 பிராண்ட்களை காணலாம்.
டாப் 100 ஆட்டோ பிராண்டுகளில் இந்திய பிராண்டுகள் 7 பட்டியல் இதோ
இந்திய ஆட்டோ பிராணட்களில் முதன்மையான கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுஸூகி நிறுவனம் இந்தாண்டில் 34வது இடத்தை பிடித்து 2543 அமெரிக்க மில்லியன் டாலர் மதிப்பில் விளங்குகின்றது.
45 வது இடத்தில் இந்திய யுட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா உள்ளது.
60வது இடத்தில் உலகின் முதன்மையான மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகின்றது.
65வது இடத்தில் டாடா மோட்டார்ஸ்
90வது இடத்தில் பஜாஜ் ஆட்டோ
97வது இடத்தில் தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் இடம்பிடித்துள்ளது.