உலகின் முன்னணி ஆட்டோமொபைல் இதழ்களின் 75 சிறந்த ஆசிரியர்களை கொண்டு தேர்வு செய்யப்படும் இந்த கார்கள் கடந்த 6 மாதங்களாக சோதனை செய்யப்பட்ட வரும் நிலையில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள முதல் 10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்க்கும் கார்கள் குறைந்தபட்சம் இரு கண்டங்களில் விற்பனை செய்யப்பட வேண்டும். மேலும் ஜனவரி 1 ,2014 முதல் மே 31, 2015 காலத்திற்க்குள் அறிமுகம் செய்யப்பட்ட புதிய காராக இருத்தல் அவசியம்.
கடந்த 2014 ஆம் ஆண்டில் வென்ற உலகின் சிறந்த கார் ஆடி ஏ3 , பெர்ஃபாரமன்ஸ் பிரிவில் போர்ஷே 911 ஜிடி3 கார் , சொகுசு பிரிவில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கார், சுற்றுசூழல் மற்றும் சிறந்த டிசைன் என இரண்டு பிரிவிலும் பிஎம்டபிள்யூ ஐ3 கார் வென்றது.
உலகின் சிறந்த கார் பிரிவில் உள்ள 10 கார்கள்
1. பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் ஏக்டிவ் டூரர்
2. சிட்ரோன் சி4 கேக்டஸ்
3. ஃபோர்டு மஸ்டாங்
4. ஹூண்டாய் ஜெனிசிஸ்
5. ஜீப் ரெனகேட்
6. மஸ்தா 2
7. மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ்
8. மினி ஹார்ட்டாப் (4/5 டோர்)
9. நிசான் கஸ்காய்
10 ஃபோக்ஸ்வேகன் பஸாத்
உலகின் சிறந்த சொகுசு கார் பிரிவில் உள்ள 10 கார்கள்
1. பிஎம்டபிள்யூ ஐ8
2. பிஎம்டபிள்யூ எக்ஸ்6
3. கேடலாக் ஏடிஎஸ் கூபே
4. கேடலாக் எஸ்கேளட்
5. கியா கே900
6. லெக்சஸ் என்எக்ஸ்
7. லெக்சஸ் ஆர்சி
8. லிங்கன் எம்கேசி
9. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கூபே
10. ரேஞ்ச்ரோவர் ஆட்டோபையோகிர்ஃபி லாங் வீல் பேஸ்
உலகின் சிறந்த பெர்ஃபாரமன்ஸ் கார் பிரிவில் உள்ள 10 கார்கள்
1. ஆடி எஸ்1
2. ஆடி எஸ்3
3. ஆடி டிடி
4. பென்ட்லி கன்டென்ட்டியல் ஜிடி ஸ்பீடு
5. பிஎம்டபிள்யூ எம்3 / எம்4
6. செவர்லே கொர்வெட்
7. டாட்ஜ் சேலஞ்சர் எஸ்ஆர்டி ஹேல்கேட்
8. ஜாகுவார் எஃப் டைப் ஆர் கூபே
9. லெக்ஸஸ் ஆர்சி. எஃப்
10. மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி
உலகின் சிறந்த சுற்றுசூழல் கார் பிரிவில் உள்ள 5 கார்கள்
1. பிஎம்டபிள்யூ ஐ8
2. ஹூண்டாய் டஸ்கன் ஃப்யூல் செல்
3. கியா சோல் எவி
4. வால்வோ எக்சி90 டி8
5. ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஇ
உலகின் சிறந்த டிசைன் கார் பிரிவில் உள்ள 5 கார்கள்
1. பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் ஏக்டிவ் டூரர்
2. சிட்ரோன் சி4 கேக்டஸ்
3. மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ்
4. போர்ஷே மசான்
5. வால்வோ எக்சி90
வரும் மாரச் மாதம் நடைபெற உள்ள ஜெனிவா மோட்டார் ஷோவில் இறுதி போட்டியில் பங்கு பெறவுள்ள 3 கார்கள் அறிவிக்கப்பட உள்ளது. வெல்லும் காரின் விபரத்தினை ஏப்ரல் மாதம் நடக்க உள்ள நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிவிக்க உள்ளனர்.