இணைய உலகின் இதயம் கூகுள் இன்று வெளியிட்டுள்ள டூடுல் இந்தியாவின் முதல் பயணிகள் தொடர்வண்டி இயக்கப்பட்டதனை நினைவு கூறும் வகையில் இருக்கின்றது.
மிக முக்கியமான நாட்களை கூகுள் டூடுல்கள் மூலம் நினைவு கூறிவருவதனை அறிவோம். இன்று இந்தியன் தொடர்வண்டி நிறுவனம் 160 ஆண்டுகளை கடக்கின்றது. அதனை கூகுள் டூடுல் மூலம் நினைவுபடுத்துகின்றது.
முதல் பயணம் 16 ஏப்ரல் 1853 ஆம் ஆண்டு 400 முக்கிய நபர்களுடன் 3 லோக்கோமொட்டிவ் எஞ்சின்களுடன் (சுல்தான்,சிந்த,சாகிப் எஞ்சின் ) 34 கிமீ பயணத்தினை தொடங்கியது. 14 பெட்டிகளுடன் 57 நிமிடங்களில் மும்பை போரி பந்தரலிருந்து 34 கிமீ தொலைவில் உள்ள தானேக்கு வந்தடைந்தது.
இன்று இந்தியன் ரயில்வே நிறுவனம் உலகின் மிக பெரிய தொடர்வண்டி நிறுவனமாகும். மிக அதிகமான தொழிலாளர்களை கொண்டிருப்பதும் இந்தியன் ரயில்வே ஆகும்.
அன்று தொடங்கி சிறிய பயணம் இன்று இந்தியாவே பயணிக்கும் பொது போக்குவரத்தின் மாபெரும் சக்தியாக விளங்குகின்றது.
இந்தியாவிற்க்கு தொடர்வண்டினை கொண்டு வந்த ஆங்கிலேயரையும் நினைவு கூறலாமே !
500 ஆண்டுகளாய் தொடர்வண்டிகள் இயங்கி வருகின்றன… தொடர்வண்டி வரலாறு பற்றி படிக்க