இந்தியாவில் கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ்களில் பெயர் சொல்லும் அளவுக்கு பிரபலங்கள் அதிகம் இல்லை என்ற நிலை சமீபகாலமாக மாறி வருகிறது. இந்தியாவிற்க்கு இப்பொழுது புதிய டீரிப்ட் வீரர் கிடைத்துள்ளார். மேலும் இவர் பிரபலமானவர் ஆவார்.
ரேமன்ட் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் மேலும் சூப்பர் கார் க்ளப் (Super Car Club) குழுவினை உருவாக்கியவருமான கௌதம் சீங்கானா அவர்கள்தான் இந்தியாவின் முதல் டீரிப்ட் கார் வீரர் ஆவார்.
ALL STARS DRIFT EUROPEAN championship செப்டம்பர் 2012 ஆம் ஆண்டில் மால்டாவில் துவங்கியது.
கௌதம் சீங்கானா அவர்கள் ALL STARS DRIFT EUROPEAN பட்டத்தை வென்றுள்ளார். 30 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு இதனை வென்றுள்ளார்.கௌதம் சீங்கனா மட்டும்தான் ஆசியா அளவில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடதக்கது.
இவர் பயன்படுத்திய கார் நிசான் சிலுவியா S13 மாற்றியமைத்து பயன்படுத்தியுள்ளார்.