இந்த காரின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்தியாவிலே உருவாகியுள்ள முதல் சூற்றுசூழல் ஸ்போர்ட்ஸ் காராகும். இந்த காரின் பெயர் சூப்பர் நோவா எலக்ட்ரிக் வாகனம்(super nova electric vehicle). இந்த காரானது 1000கிமீ வரை சிங்கிள் சார்ஜ் மூலம் செல்லக்கூடியதாம். இந்த காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 150கிமீ ஆகும்.
சூப்பர் நோவா காரில் மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை கொடுத்துள்ளனர். அவை லெட்-ஆசிட், லித்தியம் -ஐன் மற்றும் சூப்பர் கேப்பாசிட்டர் ஆகும். இவற்றில் லெட் பேட்டரி சார்ஜ் ஆக 8 மணி நேரமும், லித்தியம் 2 மணி நேரமும், மற்றும் சூப்பர் கேப்பாசிட்டர் 5 நிமிடத்தில் சார்ஜ் ஆகுமாம்.
வரும் 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ள சூப்பர் நோவா எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இன்னும் ஆராய் சான்றிதழ் பெறவேண்டி உள்ளதாம். மேலும் இந்த காருக்கு இதுவரை 250 பேர் முன்பதிவு செய்துள்ளனராம்.
தகவல்;Business-Standard