ஃபியட் அபார்த் பிராண்டில் வரவுள்ள புன்ட்டோ காருக்காக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. பெர்ஃபாமென்ஸ் ரக காராக ஃபியட் புன்ட்டோ இவோ மாறியுள்ளது .
அபார்த் புன்ட்டோ |
கடந்த மாதம் விற்பனைக்ககு வந்த அபார்த் 595 காம்பெடிஷன் பெர்ஃபாமென்ஸ் காருடன் பார்வைக்கு வந்த அபார்த் புன்ட்டோ வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரவுள்ளது.
சாதரன புன்ட்டோ காரை விட 55பிஎச்பி ஆற்றலை கூடுதலாக வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்த புன்ட்டோ காரில் 1.4 லிட்டர் டி- ஜெட் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
ஃபியட் லோகோவிற்க்கு பதிலாக அபார்த் லோகோ பதிக்கப்பட்டிருக்கும் இந்த பெர்ஃபாமென்ஸ் ரக மாடலில் கிரவுண்ட் கிளியரண்ஸ் 20மிமீ வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் நிரந்தரமாக இருக்கும்.
குறிப்பிட்ட சில டீலர்களிடம் மட்டும் முன்பதிவு தொகை ரூ.20,000 வசூலிக்கப்படுகின்றது. அபார்த் புன்ட்டோ கார் ரூ.12 லட்சத்திற்க்குள் ஆன்ரோடு விலை இருக்கும்.
Fiat Abarth Punto Bookings begin