டீசல் கார்களின் மோகம் சற்று குறையவை தொடங்கியுள்ளது. பெட்ரோல் கார்களில் விற்பனை கடந்த சில வருடங்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளதை நாம் முன்பே பதிவிட்டிருந்தோம்.
5. மாருதி சுசூகி ஆல்ட்டோ 800
இந்தியாவில் அதிக விற்பனையாகும் தொடக்க நிலை காரான மாருதி ஆல்டோ 800 காரில் 48பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 793சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மாருதி சுசூகி ஆல்ட்டோ 800 மைலேஜ் லிட்டருக்கு 22.74கிமீ ஆகும்.
மாருதி சுஸூகி ஆல்டோ 800 விலை ரூ.3.05 லட்சம் முதல் ரூ.4.10 லட்சம் ஆகும்.
4. மாருதி சுசூகி செலிரியோ
மாருதி சுசூகி செலிரியோ காரில் 68பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 998சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மாருதி சுசூகி செலிரியோ மைலேஜ் லிட்டருக்கு 23.1கிமீ ஆகும்.
மாருதி சுஸூகி செலிரியோ விலை ரூ.4.67 லட்சம் முதல் ரூ.5.90 லட்சம் ஆகும்.
3. மாருதி ஆல்டோ K10
மாருதி சுசூகி ஆல்டோ K10 காரில் 68பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 998சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மாருதி சுசூகி ஆல்டோ K10 மைலேஜ் லிட்டருக்கு 24.07கிமீ ஆகும்.
மாருதி சுஸூகி ஆல்டோ K10 விலை ரூ.3.83 லட்சம் முதல் ரூ.4.78 லட்சம் ஆகும்.
2. ரெனோ க்விட்
புதிதாக விற்பனைக்கு வந்த ரெனால்ட் க்விட் காரில் 53.2பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 800சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ரெனோ க்விட் மைலேஜ் லிட்டருக்கு 24.07கிமீ ஆகும்.
ரெனோ க்விட் விலை ரூ.3.10 லட்சம் முதல் ரூ.4.19 லட்சம் ஆகும்.
1. டாடா நானோ
டாடா நானோ இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் காராகும். 38பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 624சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டாடா நானோ மைலேஜ் லிட்டருக்கு 25.35கிமீ ஆகும்.
டாடா நானோ விலை ரூ.2.45 லட்சம் முதல் ரூ.3.42 லட்சம்.
Top 5 Most fuel efficient Petrol cars in India