அசோக் லைலேன்ட் நிறுவனம் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் தயாரிப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.நகர்பறத்தினை மையமாக வைத்து புதிய ஜென்பஸ் மற்றும் ஜென்பஸ் மீடி பேருந்துகளை 2013 இன்டர்நேஷனல் பஸ் மற்றும் யூட்டலட்டி வைக்கிள்(நொய்டா) ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஜென்பஸ் 12 மீட்டர் நீளம் 650மீமீ உயரம் இருக்கும். இதில் முன்புறம் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இடவசதி சிறப்பாக இருக்கும். பயணிகள் இலகுவாக பயணிக்க முடியும்.ஏசி மற்றும் ஏசி இல்லாமலும் இரு மாறுபட்ட வகையிலும் கிடைக்கும்.ஜென்பஸ் நகர்புற போக்குவரத்தினை மையமாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையங்களிலும் பயன்படுத்தலாம்.
BS IV டர்போசார்ஜ் காமன் ரெயில் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 228PS ஆகும்.
ஜென்பஸ் மீடீ 8 மீட்டர் நீளம் 650மீமீ உயரம் இருக்கும்.
BS 3 டர்போசார்ஜ் 4 சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 121PS ஆகும்.
இந்த பேருந்துகள் நகர்பறத்திற்க்கான பொதுபோக்குவரத்து,பள்ளிகள் கல்லூரிகளுக்கும் பயன்படுத்தலாம்.