1. லெதர் அப்ஹோல்சரி
காம்பேக்ட் செடான் பிரிவில் லெதர் அப்ஹோல்சரி பெற்ற முதல் மாடலாக ஆஸ்பயர் விளங்கும். இதன் மூலம் மிக சிறப்பான பிரிமியம் தோற்றத்தினை கொண்டதாக விளங்கும்.
2. இரட்டை கிளட்ச் தானியங்கி கியர்பாக்ஸ்
மிக சிறப்பான செயல்திறன் மற்றும் மைலேஜ் தரவல்ல டியூவல் இரட்டை கிளட்ச் தானியங்கி கியர்பாக்ஸ் 105பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் உள்ளது.
3. மைஃபோர்டு டக்
ஸ்மார்ட் மொபைல்களை வைப்பதற்க்காக சென்ட்ரல் கன்சோலில் உள்ள இந்த வசதி மிக அவசியமானதாகும். இதன் மூலம் மொபைல் வழி நேவிகேஷன் மற்றும் மொபைல் சார்ஜ் செய்யமுடியும்.
4. ஃபோர்டு மைகீ
நவீன தொழில்நுட்பம் கொண்ட மைகீ ஆப்ஷன் வாகனத்தின் முக்கிய ஆப்ஷன்களை நம் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும். அதிகபட்ச வேக கட்டுப்பாடு , குறிப்பிட்ட வேகத்தினை தாண்டும் பொழுது எச்சரிக்கை செய்யும் , எரிபொருள் குறைவதை எச்சரிக்கும் , மற்றும் சீட் பெல்ட் ரீமைன்டர் போன்ற ஆப்ஷன்கள் உள்ளது.
5. காற்றுப்பைகள்
முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் அதாவது ஓட்டுநர் , பயணிக்கான காற்றறுப்பைகளை நிரந்தர அம்சமாக அனைத்து வேரியண்டிலும் இருக்கும்.
இந்த வசதிகள் அனைத்தும் ஃபோர்டு ஆஸ்பயர் காரில் முதன்முறையாக வருவது குறிப்பிடதக்க அம்சமாகும்.
வரும் ஜூலை 27ந் தேதி முதல் ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் காருக்கு முன்பதிவு தொடங்க உள்ளது. ரூ.30,000 கட்டனமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Ford Figo Aspire sedan Features