ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் |
ஃபிகோ ஆஸ்பயர் மிக விரைவில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இதன் போட்டியாளர்களாக விளங்கும் கார்கள் டிசையர் , அமேஸ் , ஸெஸ்ட் மற்றும் எக்ஸ்சென்ட்.
ஃபிகோ ஆஸ்பயர் என்ஜின் விபரம்
1. 88.8 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 112என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.
ஆஸ்பயர் 1.2 லிட்டர் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 18.6 கிமீ ஆகும்.
2. 110.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 136என்எம் ஆகும். இதில் 6 வேக டியூவல் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.
ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் 1.5 லிட்டர் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 17.2கிமீ ஆகும்.
3. 98.6 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 215என்எம் ஆகும். இதில் 6 வேக டியூவல் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.
ஆஸ்பயர் 1.2 லிட்டர் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 25.83கிமீ ஆகும்.
அளவுகள்
ஃபோர்டு ஆஸ்பயர் காரின் நீளம் 3995மிமீ , ஆகலம் 1695மிமீ மற்றும் உயரம் 1525 மிமீ ஆகும். இதன் வீல்பேஸ் 2491மிமீ ,கிரவுண்ட் கிளியரன்ஸ் 174மிமீ ஆகும். இதன் பூட் வசதி கொள்ளளவு 359 லிட்டர் ஆகும்.
சிறப்பம்சங்கள்
காம்பெக்ட் செடான் சந்தையில் முதன்முறையாக ஃபிகோ ஆஸ்பயர் காரில் மொத்தம் 6 காற்றுப்பைகள் நிரந்தர அம்சமாக அனைத்து வேரியண்டிலும் இருக்கும் ஏபிஎஸ் ,இபிடி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும்.
ஆஸ்பயர் கார் அம்பியன்ட் , டிரென்ட் , டைட்டானியம் மற்றும் டைட்டானியம் ஃபிளஸ் வேரியண்டில் கிடைக்கும். மேலும் 6 விதமான வண்ணங்களில் ஃபிகோ ஆஸ்பயர் கிடைக்கும்.
Ford Figo Aspire Engine details Revealed