ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வளரும் நாடுகளை குறிவைத்து பட்ஜெட் விலையில் கார்களை தயாரிப்பதற்க்காக புதிய பிராண்டை வரும் 2018ம் ஆண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யுவி |
நிசான் டட்சன் பிராண்டு போல இந்த புதிய பிராண்டை உருவாக்க உள்ளனர். இந்த பிராண்டில் ஹேட்ச்பேக் , செடான் மற்றும் எஸ்யுவி கார்கள் வரவுள்ளன. ஃபோக்ஸ்வேகன் பட்ஜெட் கார்களின் விலை ரூ.5.60 லடசத்தில் தொடங்கி ரூ.7.07 வரையிலான விலையில் வரவுள்ளது..
முதலில் சீனாவில் விற்பனைக்கு வருகின்றது அதனை தொடர்ந்து இந்தியா , பிரேசில் , ரஷ்யா , கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆப்பரிக்கா போன்ற நாடுகளில் ஃபோக்ஸ்வேகன் பட்ஜெட் பிராண்டு வரவுள்ளது.