ஃபெரார்ரி நிறுவனம் உலகயரங்கில் சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பதில் தனியான பராம்பரியத்தை கொண்ட நிறுவனமாகும். ஃபெரார்ரி கார் வாங்க உங்களிடம் பணம் மட்டும் இருந்தால் போதாது உங்களுக்கு என தனியான பராம்பரியம் இருக்கு வேண்டும். அதாவது சில தலைமுறை பணக்காராராக இருத்தலும் அவசியம்.
கடந்த 66 ஆண்டுகளாக சந்தையில் உள்ள இத்தாலி நாட்டின் ஃபெரார்ரி கடந்த வருடம் 2012 யில் தன் வரலாற்றிலே மிக அதிகமான கார்களை விற்றள்ளது. 2012 ஆம் ஆண்டில் 7138 கார்களை டெலிவரி செய்துள்ளனர்.
உலகயரங்கில் மிகுந்த சக்தி வாய்ந்த முதன்மையான நிறுவனமாகவும் ஃபெரார்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இணைய உலகின் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளியுள்ளது. கடந்த ஆண்டில் சக்தி வாய்ந்த 100 நிறுவனங்களில் ஃபெரார்ரி இல்லை.
அமெரிக்கா மற்றும் கனடாவில் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆனால் அதன் சொந்த நாடான இத்தாலியில் 60% சரிவினை சந்தித்துள்ளது.இந்த சரிவிற்க்கு காரனம் இத்தாலியில் உள்ள பொருளாதார மந்தநிலையே காரனம்.
மொத்த வருமானம் 244 மில்லியன் யூரோ ஆகும்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் 2000 வாகனங்களை விற்றள்ளது. ஐரோப்பாவில் 673 வாகனங்களை விற்றள்ளது. ஜெர்மனியில் 750 வாகனங்களை விற்றள்ளது. சீனா மற்றும் தைவான், ஹாங்காங் போன்றவைகளில் 784 வாகனங்களை விற்றள்ளது.
புதிதாக வரவுள்ள பவர்ஃபுல்லான ஃபெரார்ரி எஃப் 150 காரினை அதாவது எஃப் 70 கார் இரு இந்தியர்களுக்கும் பிரிவியூ காட்டியுள்ளதாம் ஃபெரார்ரி..