ஃபியட் அபார்த் 595 Vs மினி கூப்பர் எஸ் – ஒப்பீடு |
பிஎம்டபிள்யூ மினி கூப்பர் எஸ் காருடன் நேரடியான போட்டியாக வந்துள்ள ஃபியட் அபார்த் 595 காம்படிஷன் என இரண்டு பெர்ஃபாமென்ஸ் ரக ஹேட்ச்பேக் கார்களின் போட்டியும் சூடுபிடித்துள்ளது.
தோற்றம்
இரண்டு கார்களுமே மிகவும் சிறப்பான கிளாசிக் லுக்குடன் வட்ட வடிவ முகப்பு விளக்குகளுடன் , பனி விளக்குகள் என இரண்டும் முகப்பு தோற்றத்தில் கவர்ந்திழுக்கின்றது.
மினி கூப்பர் எஸ் காரின் நீளம் , அகலம் மற்றும் உயரம் 3850x1727x1415 ஆகும்.
ஃபியட் அபார்த் 595 காரின் நீளம் , அகலம் மற்றும் உயரம் 3657x1897x1485 ஆகும்.
கூப்பர் எஸ் காரின் வீல்பேஸ் 2495மிமீ மற்றும் ஃபியட் அபார்த் 595 காரின் வீல்பேஸ் 2300மிமீ ஆகும்.
பின்புறத்திலும் பழமையான தோற்றத்தில் ஒன்றுக்குஒன்று சளைத்த்து இல்லை.
உட்புறம்
மினி கூப்பர் S மற்றும் அபார்த் 595 காம்பெடிஷன் இன்டிரியரின் தோற்றமும் கிளாசிக்கில் பின்னுகின்றது. உட்புறத்தில் இரட்டை வண்ணங்களில் மின்னுகின்றது. தொடுதிரை அமைப்புடன் விளங்குகின்றது.
Abarth 595 Competizione |
Mini Cooper S |
என்ஜின்
என்ஜின் ஆற்றல் மற்றும் செயல்திறனில் அபார்த் 595 காரை விட கூப்பர் எஸ் சற்று கூடுதலாக வெளிப்படுத்துகின்றது.
மினி கூப்பர் எஸ் காரின் 2.0 லிட்டர் ட்வீன் பவர் டர்போ என்ஜின் ஆற்றல் 189 எச்பி மற்றும் டார்க் 280என்எம் ஆகும். 6 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தியுள்ளனர்.
ஃபியட் அபார்த் 595 காம்பெடிஷன் காரின் 1.3 லிட்டர் டி-ஜெட் என்ஜின் ஆற்றல் 160எச்பி மற்றும் டார்க் 230என்எம் ஆகும் 5 வேக தானியங்கி கியர்பாக்ஸூடன் பேடல் ஷிஃப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஃபியட் அபார்த் 595 கார் 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 7.4 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.
பிஎம்டபிள்யூ மினி கூப்பர் எஸ் கார் 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 6.7 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.
ஃபியட் அபார்த் 595 காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 210கிமீ ஆகும். மினி கூப்பர் எஸ் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 233கிமீ ஆகும்.
விலை (Ex-Showroom Delhi)
ஃபியட் அபார்த் 595 காம்பெடிஷன் காரின் விலை ரூ.29.85 லட்சம்
மினி கூப்பர் எஸ் காரின் விலை ரூ. 31.50 லட்சம்
ஆட்டோமொபைல் தமிழன் பரிந்துரை
பெர்ஃபாமென்ஸ் விரும்பிகளுக்கு ஏற்ற ஃபியட் அபார்த் 595 காம்படிஷன் மற்றும் பிஎம்டபிள்யூ மினி கூப்பர் எஸ் இரண்டுமே ஒன்றுக்குஒன்று சளைத்த கார்ககள் இல்லை .. உங்கள் தேர்வே விருப்பம் …………..