ஸ்விஃப்ட் கார் தொடர்ந்து பி பிரிவு ஹேட்ச்பேக் சந்தையின் முன்னனி மாடலாக விளங்கி வருகின்றது. அதனை தொடர்ந்து கிரான்ட் ஐ10 உள்ளது. ஸ்விஃப்ட் , கிரான்ட் ஐ10 கார்களை ஃபிகோ வீழ்த்துமா ?
பெட்ரோல் மாடல்கள்
பிரியோ கார் மட்டும் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமே உள்ளது. மற்றவை அனைத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களில் உள்ளது.
ஃபிகோ காரில் இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் உள்ளது. 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் சக போட்டியாளர்கள் ஒரு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனை மட்டுமே பெற்றுள்ளது.
பெட்ரோல் மாடல்கள் ஒப்பீடு
இந்த 4 பெட்ரோல் மாடல்களில் போல்ட் காரின் ஆற்றல் அதிகமாக உள்ளது. அதனை தொடர்ந்து பிரியோ மற்றும் ஃபிகோ உள்ளது.
ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் போல்ட் மற்றும் ஸ்விஃபட் தவிர மற்றவற்றில் உள்ளது. இவற்றில் ஃபிகோ காரில் 112பிஎஸ் ஆற்றல் மற்றும் 6 வேக டியூவல் கிளட்சினை பெற்றுள்ளது.
பெட்ரோல் கார்களின் மைலேஜ் விசயத்தில் மற்றவற்றை பின் தள்ளி மாருதி ஸ்விஃபட் முன்னேறுகின்றது. விலையில் பிரியோ ரூ.4.24 லட்சத்திலும் , ஃபிகோ 4.29 லட்சத்திலும் தொடங்குகின்றது.
டீசல் மாடல்கள்
100பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் ஃபோர்டு ஃபிகோ காரை தொடர்ந்து போல்ட் மற்றும் ஸ்விஃப்ட் உள்ளது. போல்ட் மற்றும் ஸ்விஃப்ட் கார்கள் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் என்ஜினை பெற்றுள்ளது.
ஃபிகோ காரின் மைலேஜ் லிட்டருக்கு 25.83 கிமீ ஆகும். இது ஸ்விஃப்ட் காரை விட அதிகம். மேலும் விலையிலும் ஃபிகோ ரூ.5.29 லட்சத்தில் தொடங்குகின்றது.
டீசல் மாடல்கள் ஒப்பீடு
ஆற்றல், மைலேஜ் மற்றும் விலை என அனைத்திலும் மற்ற போட்டியாளர்களை விட மிக சவாலானை ஏற்படுத்தியுள்ளதால் நல்ல விற்பனை எண்ணிக்கை ஃபிகோ பதிவு செய்யலாம்.
பி பிரிவு ஹேட்ச்பேக்கில் மிகவும் பாதுகாப்பான கார் என்றால் அது ஃபோர்டு ஃபிகோ கார்தான் 6 காற்ற்ப்பைகள் மற்றும் அனைத்து வேரியண்டிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகளை பெற்றுள்ளது.
என்ஜின் மற்றும் விலை போன்ற விவரங்களை கொண்டு மட்டுமே இந்த ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. வாகனத்தின் டிசைன் தோற்றம் உங்கள் பார்வைக்கே விடப்பட்டுள்ளது.
Figo vs Swift vs Bolt vs Grand i10 vs Brio – comparison