வரும் பிப்ரவரி 2016 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி வாயிலாக இந்தியாவில் பார்வைக்கு வரவுள்ள பிஆர்-வி எஸ்யூவி 2016ம் நிதி ஆண்டில் சந்தைக்கு வரும். பிஆர்வி எஸ்யூவி கார் 7 இருக்கைகள் கொண்ட மாடலாகும்.
பிரியோ , அமேஸ் , மொபிலியோ போன்ற கார்கள் உருவாக்கப்பட்ட அதே தளத்தில் உருவாகியுள்ள பிஆர்-வி காரில் 118ஹெச்பி ஆற்றலை வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 98.6 ஹெச்பி ஆற்றலை வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் இதில் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் பெட்ரோல் மாடலில் சிவிடி ஆட்டோமேட்டிக் ஆப்ஷனிலும் வரவுள்ளது.
1.5 லிட்டர் எர்த் டீரிம்ஸ் டீசல் என்ஜின் சிறப்பான மைலேஜ் தரக்கூடியதாகும் எனவே காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களில் சிறப்பான மைலேஜ் தரக்கூடிய மாடலாக விளங்கும். 1.6 லிட்டர் என்ஜின் ஐரோப்பியா நாடுகளுக்கு பயன்படுத்த உள்ளனர்.
2016ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் பிஆர் வி உற்பத்தி தொடங்கும் என்பதனை ஹோண்டா உறுதிபடுத்தியுள்ளது. மேலும் பிஆர் வி காரின் விலை ரூ. 8 லட்சம் முதல் 13 லட்சத்திற்க்குள் இருக்கலாம். க்ரெட்டா , டஸ்ட்டர் , ஸ்கார்ப்பியோ போன்ற மாடல்களுக்கு சவாலினை தரலாம்.
Honda BR-V to launch on April 2016