வித்தியாசமான தோற்றத்தில் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் கலவையில் உருவான ஹோண்டா நவி மோட்டார்சைக்கிள் வரும் ஏப்ரல் 2016 முதல் டெலிவரி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்கூட்டர் வடிவ தாத்பரியங்களில் மோட்டார்சைக்கிள் செயல்பாட்டினை கலந்து உருவாக்கப்பட்டுள்ள ஹோண்டா நவி மாடல் வாடிக்கையாளர்கள்களுக்கு சிறப்பான ரைடிங் அனுபவத்தினை வழங்கும் நோக்கிலே வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க ; ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் விபரம்
பிரசத்தி பெற்ற ஆக்டிவா ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள அதே பவர்டெரியின் ஆப்ஷனை கொண்டுள்ள நவி பைக்கில் 7.8bhp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 109.2cc என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஆக்டிவா ஸ்கூட்டரில் உள்ள அதே HET என்ஜினாகும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. நீளம் 1854மிமீ , அகலம் 748மிமீ மற்றும் உயரம் 1039மிமீ ஆகும். மிக இலகுவான எடை கொண்ட 101 கிலோ மட்டுமே கொண்டுள்ள நாவி பைக்கில் இருபக்கங்களிலும் டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்க சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறம் ஒற்றை சாக் அப்சார்பரை பெற்றுள்ளது.
ஹோண்டா நவி கஸ்டமைஸ்
மேலும் நாவி மோட்டார்சைக்கிளை கஸ்டமைஸ் செய்தும் வாங்கலாம் அதாவது கஸ்டமைஸ் ஆப்ஷனில் லக்கேஜ் பெட்டி , இருக்கை கவர் , முகப்பு விளக்கு புரடெக்டர் கவர் , வைஸர் போன்றவற்றை பெற இயலும். தற்பொழுது மொபைல் ஆப் வழியாக நவி மாடலுக்கு முன்பதிவு நடந்து வருகின்றது.
ஹோண்டா நாவி படங்கள்
[envira-gallery id=”5902″]