ஹோண்டா அமேஸ் செடான் காரின் காத்திருப்பு காலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் உற்பத்தியை அதிகரிக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. எனவே இதன் மூலம் மாதம் 5500 கார்கள் வரை தயாரிக்க உள்ளது. தற்பொழுது மாதம் 5000 அமேஸ் கார்களை தயாரிக்கின்றது.
கிரேட்டர் நொய்டா ஆலையின் மூன்றாவது ஸ்ஃபிட்டிலும் அமேஸ் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதால் காத்திருப்பு காலம் 5 மாதத்தில் இருந்த மூன்றாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.