ஹூண்டாய் க்ரெட்டா காரின் காத்திருப்பு காலம் இரண்டு மாதங்களாக குறைந்துள்ளது. க்ரெட்டா ஆட்டோமேட்டிக் மற்றும் மெனுவல் என இரண்டிற்க்குமே குறைந்தது.
விற்பனைக்கு வந்த சில மாதங்களில் எஸ்யூவி கார் சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெற்று விளங்கும் க்ரெட்டா எஸ்யூவி காரில் டீசல் ஆட்டோமேட்டிக் மற்றும் மெனுவல் மாடல்கள் உள்ளது.
6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலையிலிருந்த வாடிக்கையாளர்களுக்கு தற்பொழுது உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதால் இரண்டு மாதங்களுக்கள் டெலிவரி எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் க்ரெட்டா காரின் விலை ரூ.10000 முதல் ரூ.20000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. டஸ்ட்டர் , டெரானோ மற்றும் ஸ்கார்ப்பியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக உள்ளது.
Hyundai Creta waiting period reduce