ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த சில வாரங்களிலே 32,000 முன்பதிவுகளை பெற்று க்ரெட்டா அபரிதமான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்து வருகின்றது.
ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி |
32,000த்திற்க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ள க்ரெட்டா எஸ்யூவி ஈகோஸ்போர்ட் , டஸ்ட்டர் , டெரோனோ போன்ற எஸ்யூவிகளுக்கு மிகுந்த சவாலினை தந்துள்ளது.
மாதம் 5000 கார்கள் வரை உற்பத்தி செய்யப்பட்டு வந்த க்ரெட்டா எஸ்யுவி தற்பொழுது மாதம் 7000 கார்களை உற்பத்தி செய்யும் நோக்கில் விரிவுப்படுத்தியுள்ளனர்.
ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காரில் உள்ள தானியங்கி மாடலுக்கு 6 முதல் 10 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமையும் என்பதால் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க ; க்ரெட்டா எஸ்யூவி விமர்சனம்
மேலும் வெளிநாடுகளுக்கு செப்டம்பர் மாதம் முதல் ஏற்றுமதி செய்யும் முனைப்பில் இருந்த ஹூண்டாய் தற்பொழுது நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்க்கு மாற்ற உள்ளது.
Hyundai Creta Production increases