ஹூண்டாய் நிறுவனம் 2015 ஆம் ஆண்டுக்குள் 4 புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் 19.4 % சந்தை பங்கினை வைத்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகும்.
எஸ்யூவி சந்தையின் அபரிதமான வளர்ச்சினை குறிவைத்து காம்பெக்ட் எஸ்யூவி காரை வடிவமைத்து வருகின்றது. மேலும் எம்பிவி கார் ஒன்றை வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாம். எம்பிவி சந்தையில் எர்டிகா முதன்மையாக விளங்கிவருகின்றது. இதனை குறிவைத்து எம்பிவி தயாரிக்க உள்ளது.
புதிய செடான் காரினை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாம் இந்த செடான் கார் ஐ20 காரினை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். 2013யில் செடான் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் புதிய ஹேட்ச்பேக் ஐ10 மற்றும் ஐ20 கார்களுக்கு இடைப்பட்ட நிலையில் புதிய ஹேட்ச்பேக்கினை சோதனையிட்டு வருகின்றது. இதற்க்கு ஐ15 என்ற பெயரிடப்படலாம். இந்த கார் வரும் ஆண்டிற்க்குள் விற்பனைக்கு வரும்.