இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் அதிரடியாக 2017 டாக்கர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்பதனை அறிவித்துள்ளது. ஜெர்மனியின் ஸ்பீட்பிரென் நிறுவனத்துடன் இணைந்து மே 21 ,2016யில் தொடங்க உள்ள மெர்ஜூகா பந்தயத்தில் பங்கேற்கின்றது.
ஆஃப் ரோடு பந்தய வாகனத்தினை உருவாக்குவதில் மிகுந்த அனுபவமிக்க ஜெர்மனி ஸ்பீட்பிரென் GMBH நிறுவனத்தின் ஸ்பீட்பிரென் 450 ரேலி மோட்டார்சைக்கிள் பயன்படுத்தப்பட உள்ளது. 2017 டாக்கர் ரேலிக்கு முன்னதாக பல நிலை போட்டிகள் உலகின் கடினமான சாலைகளில் நடத்தப்பட உள்ளது. இவற்றினை கடந்த 2017 டாக்கர் ரேலியில் மேம்படுத்தப்பட்ட ஸ்பீட்பிரென் 450 பைக் பயன்படுத்தப்பட உள்ளது.
ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் ரேசிங் அணி , ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி திரு,மார்கஸ் அவர்களின் நேரடியான கட்டுபாட்டில் ஹீரோ R&D கீழாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக கடுமையான சவால்கள் நிறைந்த ஆஃப் ரோடு சாலைகளில் பயணிக்கும் மிக சவாலான மோட்டார்சைக்கிள் பந்தயமான டாக்கர் பந்தயத்தில் ஹீரோ மோட்டோகார்ப் அனியின் சார்பாக இந்தியாவின் டாக்கர் ரேலி சிங்கமாக கருதப்படும் சிஎஸ். சந்தோஷ் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த Joaquim Rodrigues ala ‘J-Rod ஆகிய இருவரும் பங்கேற்கின்றனர்.
CS santosh மற்றும் Joaquim Rodrigues
இந்தியாவின் முதல் டாக்கர் ரேலி வீரரான சிஎஸ்.சந்தோஷ் பல சர்வதேச பந்தயங்களிலும் பங்கேற்றுள்ளார். மற்றொரு வீரரான Joaquim Rodrigues சூப்பர்க்ராஸ் மற்றும் மோட்டோக்ராஸ் பந்தயங்களில் அதிகம் பங்கேற்ற அனுபவமிக்கவராகும்.
இந்தியாவின் டிவிஎஸ் மோட்டார்ஸ் , ஷேர்கோ நிறுவனத்துடன் இணைந்து டக்கார் ரேலியில் பங்கேற்று வருகின்றது. தற்பொழுது ஹீரோ நிறுவனமும் அந்த வரிசையில் இணைகின்றது.