ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பைக்கள் தற்பொழுது ஸ்நாப்டீல் ஆன்லைன் இனையதளம் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது. எச்ஃஎப் டான் முதல் கரீஷ்மா இச்ட்எம்ஆர் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
ஸ்நாப் டீல் இனையத்தில் பதிவு செய்த பின்னர் மற்ற முழுமையான நடவடிக்கைகள் அனைத்து டீலர் மூலம் எடுக்கப்படும். மீதி தொகையை டீலரிடம் செலுத்தலாம். இங்கு முன்பதிவு செய்வதன் மூலம் 2 முதல் 5 நாட்களுக்குள் மாடலின் இருப்பினை பொருத்து டெலிவரி செய்யப்படும்.
ஸ்நாப்டீல் இனையத்தில் முன்பதிவு செய்தால் ரத்துசெய்ய முடியாது. மேலும் 30 நாட்களுக்குள் எக்ஸ்சேஞ்ச் அல்லது திருப்பி அளிக்க வசதியுள்ளது.