இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை நிமிடத்திற்க்கு நிமிடம் வளர்ந்து வருகிறது. இந்நிலையில பல வாகன நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கால் தடங்களை பதிக்க முயன்று வருகிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தன்னுடைய க்ருஸர் பைக்களை இந்தியாவில் மிகச் சிறப்பான வரவேற்பினை பெற்று வருகிறது. ஆனாலும் விலை கூடுதலாக இருப்பதனால் விற்பனை மந்தமாக இருக்கின்றது.
இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் அசெம்பிலிங் யூனிட் ஹரியானா மாநிலத்தின் பவால் பகுதியில் CKD(Complete knock down) ஆலை உள்ளது.
அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்க்கு இரண்டு அசெம்பிலிங் யூனிட் உள்ளது. ப்ரேசில் மற்றும் இந்தியா ஆகும்.
இந்தியாவிற்க்கு மிக முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கென தனியான என்ஜின்களை உருவாக்க களமிறங்கியுள்ளது. ஹார்லி டேவிட்சன் பைக்கள் அதிகப்பட்சமாக 1000cc களில்தான் கிடைக்கும். இதனால் விலையும் கூடுதல்தான்.
இவற்றிற்க்கு பதிலாக 400-500cc என்ஜின்களை உருவாக்க உள்ளனர். அவ்வாறு உருவாக்கினால் 3.5 லட்சத்திற்க்குள் இருக்கும்.இதனால் விற்பனை அதிகரிக்கும் என கருதுகின்றனர்.
2014 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் ஆட்டோ ஸோவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். 2014யில் எதிர்பார்க்கலாம்.
CKD மற்றும் CBU
CKD மற்றும் CBU என்பன வார்த்தைகள் அதிகமாக ஆட்டோமொபைல் இதழ்கள் மற்றும் ஆட்டோமொபைல் இணையங்களில் கானலாம்.
CKD என்றால் என்ன
Complete Knock Down என்பதன் சுருக்கமே CKD ஆகும். அதாவது ஒரு நாட்டில் தலைமையிடத்தில் அல்லது உற்பத்தி ஆலையில் இருந்த மற்ற நாட்டுக்கு (அசெம்பிலிங் யூனிட்)தன்னுடைய மூலப்பொருட்களை அனுப்பி வைத்து அங்கு அசெம்பிலிங் செய்து விற்பனை செய்வர்.
CBU என்றால் என்ன
Complete Built Unit என்பதன் சுருக்கமே CBU ஆகும். அதாவது ஒரு நாட்டில் இருந்து முழுமையாக உற்பத்தி செய்து வேறு நாட்டிற்க்கு இறக்குமதி செய்து விற்பனை செய்வர்.
இந்தியாவில் முழுமையாக உற்பத்தி செய்து இறக்குமதி செய்த (CBU)வாகனங்களுக்கு 100 சதவீத வரியாகும். ஆனால் மூலப்பொருட்களை அனுப்பி வைத்து (CKD) உற்பத்தி செய்யப்படும் வாகனங்களுக்கு 60 சதவீத வரியாகும்.