வணக்கம் வாசகர்களே…
ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சி வேகம் சிறப்பாகவே உள்ளது.தினமும் பல புதிய மாற்றங்களை கண்டு வருகிறது ஆனாலும் அவைகளுக்கு அடிப்படையான பல நுட்பங்களை தமிழில் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில்தான் ஆட்டோமொபைல் தமிழன் இணையத்தை இயக்கிவருகிறேன்.
என்ஜின் இயங்குவது எப்படி என்ற தொடருக்குப் பின் எந்த தொழில்நுட்ப விவரங்களை அதிகமாக வெளியிடவில்லை.தற்பொழுது ஒரு முழுமையான வாகனவியல் அடிப்படை நுட்பங்களை தமிழில் வெளியிட முடிவு செய்துள்ளேன். இந்த தொடரில் முக்கிய குறிப்புகள் பலவும் ஆங்கிலத்திலும் இடம்பெறும். இதற்க்கு தங்களுடைய ஆதரவினை தந்து பலர் அறிய உதவுங்கள்…
வாகனவியல் நுட்பங்கள்
வாகனவியல் 3 அடிப்படையான அமைப்புகள்…
1. ஆற்றல் உருவாகும் அமைப்பு(Power Plant in Vehicle)
வாகனங்கள் இயங்க ஆற்றல் அவசியம் என்பதனை அறிவோம். ஆற்றல் எவ்வாறு உருவாக்கப்படுகிறது.ஆற்றல் உருவாக எந்த நுட்பங்கள் உதவுகின்றன போன்றவை ஆற்றலை உருவாக்கும் பிரிவில் இருக்கும்.இவற்றில் உள்ள அமைப்புகள்..
அ.ஆற்றல் உருவாக்கும் அமைப்பு(Power Generation)
- என்ஜின்(ENGINE)
- எரிபொருள் அமைப்பு(Fuel System)
- உள்ளேடுக்கும் அமைப்பு(Intake System)
- வெளியேற்றும் அமைப்பு(Exhaust System)
- குளிர்விக்கும் அமைப்பு(Cooling System)
ஆ.ஆற்றலை செயலாக மாற்ற உதவும் அமைப்பு(Transmission)
- க்ளட்ச்(Clutch)
- க்யர் பாக்ஸ்(GEAR Box)
- ட்ரான்ஸ்பர் கேஸ்(Transfer Case)
- ட்ச்ரியன்டல்(Differntial)
- வீல்/டயர்(Wheels/Tyres)
மற்றவை விரைவில் ….