இனி தொடருவோம் முழுமையான வாகனவியல் அடிப்படை நுட்பங்களை இனி அறியலாம். கடந்த சில மாதங்களுக்கு முன் என்ஜின் இயங்குவது எப்படி என்ற தொடரின் முழுமையான விவரங்களை பிடிஎஃப் வடிவில் இலவசமாக தரவிறக்க இங்கு செல்லவும்..
வாகனவியல் நுட்பங்கள்
1. ஆற்றல் உருவாகும் அமைப்பு(Power Plant in Vehicle)
- என்ஜின்(ENGINE)
- எரிபொருள் அமைப்பு(Fuel System)
- உள்ளேடுக்கும் அமைப்பு(Intake System)
- வெளியேற்றும் அமைப்பு(Exhaust System)
- குளிர்விக்கும் அமைப்பு(Cooling System)
- க்ளட்ச்(Clutch)
- க்யர் பாக்ஸ்(GEAR Box)
- ட்ரான்ஸ்பர் கேஸ்(Transfer Case)
- ட்ஃப்ரியன்சல்(Differntial)
- வீல்/டயர்(Wheels/Tyres)
2. வாகனத்தை இயக்கும் அமைப்பு(Running System)
வாகனத்தை இயக்கும் அமைப்பானது வாகனத்தினை நம் தேவைக்கேற்ப வாகனத்தை கொண்டு செல்ல உதவும் அல்லது நிறுத்தவும் இந்த அமைப்பு செயலாற்றும்.
- சஸ்பென்சன்(Suspension)
- ஸ்டீரிங்(Steering)
- ப்ரேக்(Braking)
3. சொகுசு தன்மைக்கான அமைப்பு(Comfort System)
சொகுசு என்றால் அதிநவீன வசதிகள் மட்டுமல்ல, சிறப்பான சீட்டீங், வாகனத்தை இயக்க ஓட்டுனர்க்கான வசதிகள், ஆடியோ இன்னும் பல…
- ஆடியோ/வீடியோ/GPS
- AC/Heater
- Seating etc..
இவைகள்தான் வாகனத்தின் மிக முக்கியமான அடிப்படைகளாகும். தற்பொழுது வாகனத்துறையில் பாதுகாப்பு அம்சங்களும்(Saftey System) நிச்சியமாக தவிர்க்க முடியாத ஒன்று. எனவே அதனை நாம் இணைத்துக்கொள்ளலாம்.
அடிப்படைகள் அனைத்தும் முழுமையான விவரங்கள் மற்றும் படங்களுடன் இனி வரும் பதிவுகளில் கானலாம். இந்த தொடரினை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து பலர் அறிய உதவுங்கள்…