![]() |
ஃபோர்டு எண்டெவர் |
1. ஃபோர்டு எண்டெவர்
மேம்படுத்தப்பட்ட புதிய ஃபோர்டு எண்டெவர் வரும் 2016ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய சந்தையில் களமிறங்கும் தற்பொழுது ஆராய் சோதனையில் உள்ள புதிய எண்டெவர் எஸ்யுவி முந்தைய மாடலை விட தோற்ற அமைப்பிலிருந்து உட்ப்புறம் என்ஜின் அனைத்திலும் சக போட்டியாளர்களுடன் போட்டியிட தயாராக உள்ளது.
வெளிநாடுகளில் விற்பனைக்கு வந்துள்ள புதிய ஃபோர்டு எண்டெவர் அடுத்த வருடத்தில் இந்தியா வரும்.
மேலும் வாசிக்க ; ஃபோர்டு எண்டெவர் வெற்றி பெறுமா ?
2. மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட்
புதிய பஜெரோ ஸ்போர்ட் வரும் ஆகஸ்ட் 1ந் தேதி தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து இந்தியாவில் அடுத்த ஆண்டின் மத்தியில் வரும். பஜெரோ ஸ்போர்ட் எஸ்யுவி முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட பிரிமியம் தோற்றத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.
மேலும் வாசிக்க; பஜெரோ ஸ்போர்ட் விவரம்
பஜெரோ ஸ்போர்ட் |
3. ஹூண்டாய் சான்டா ஃபீ
தென்கொரிய சந்தையில் மேம்படுத்தப்பட்ட சான்டா ஃபீ எஸ்யுவி சிறிய மாற்றங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் இந்திய சந்தையில் எப்பொழுது வரலாம் என்பதற்கு உறுதியான தகவல் இல்லை.
மேலும் வாசிக்க ; புதிய சான்டா ஃபீ விவரம்
ஹூண்டாய் சான்டா ஃபீ |
4. செவர்லே ட்ரெயில் பிளேசர்
இந்திய சந்தைக்கு புதிதாக வரவுள்ள செவர்லே ட்ரெயில் பிளேசர் எஸ்யுவி மிக சிறப்பான தோற்றத்துடன் பிரிமியம் எஸ்யுவி சந்தையில் அடுத்த வருடத்தில் களமிறங்க உள்ளது.
மேலும் வாசிக்க ; செவர்லே ட்ரெயில்பிளேசர் வெற்றி பெறுமா ?
5. டொயோட்டா ஃபார்ச்சூனர்
மேம்படுத்தப்பட்ட ஃபார்ச்சூனர் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. ஃபார்ச்சூனர் எஸ்யுவி தோற்றம் , உட்புறம் மற்றும் புதிய என்ஜின் என போட்டியாளர்களுக்கு கடும் சவாலினை தரவுள்ளது.
மேலும் வாசிக்க ; புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் முழுவிபரம்
மேலே உள்ள இந்த 5 எஸ்யுவி கார்களுக்கு போட்டியாக சாங்யாங் ரெக்ஸ்டான் மற்றும் ஹோண்டா சிஆர்-வி ஆகும்.
Upcoming top 5 premium SUV in India